FINANCE

அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக் ஆவடியில் துவக்கம்

தலைமுடி மற்றும் தோல் அழகியலில் பிரபல நிறுவனமான அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக் (Advanced GroHair & GloSkin Clinic) தனது 44 ஆவது புதிய பிரான்சைஸ் (franchies) வகையிலான கிளையை திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் துவக்கியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பாண்டிச்சேரி, தெலங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

தலைமுடி கொட்டுவது, வழுக்கை தலை, முடி அடர்த்தி இல்லாமை, பொடுகு தொல்லை, செயற்கை முடி பொருத்துவது போன்ற முடி சம்பந்தமான சிகிச்சைகளும், புருவம், கண்ணிமை போன்ற தோல் சம்பந்தமான சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் புதிய கிளினிக் சென்னையை அடுத்த திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி நியூ மிலிட்டரி ரோட்டில் திறந்துள்ளது. இதனை ஜெயா கல்வி அறக்கட்டளையின் தலைவர் கனகராஜ், அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்கின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சரண்வேல் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், பிங்க் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் சஜீனா அஜீஸ், அட்வான்ஸ்டு க்ரோஹேர் குளோஸ்கின் கிளினிக்கின் ஆவடி கிளையின் உரிமையாளர் டாக்டர் ரம்யா வேல்முருகன் மற்றும் கிளினிக்கின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *