தமிழ் செய்திகள்

28-வது பேட்ச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தொடக்கம்: புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய SPJIMR PGPDM

சென்னை: பாரதிய வித்யா பவனின் எஸ்.பி. ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SPJIMR), தனது மேம்பாட்டு மேலாண்மை முதுகலைப் பட்டப்படிப்பான (PGPDM) 28-வது பேட்சிற்கான சேர்க்கை விண்ணப்பங்களைத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 2027-இல் தொடங்கவுள்ள இந்தப் பாடத்திட்டம், சமூகத் துறையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவின் சமூகத் துறை தற்போது பாரம்பரிய தொண்டு முறைமையிலிருந்து உரிமை அடிப்படையிலான வளர்ச்சி, சமூக தொழில்முனைவு, தாக்க முதலீடு (Impact Investing), ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்), பொதுத்-தனியார் கூட்டாண்மை மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) போன்ற நவீன அணுகுமுறைகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய தலைமுறை சமூகத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் AACSB, AMBA மற்றும் EQUIS ஆகிய மூன்று சர்வதேச அங்கீகாரங்களையும் (Triple Crown Accreditation) பெற்ற ஒரே வளர்ச்சி மேலாண்மைத் திட்டமாக SPJIMR PGPDM திகழ்கிறது. கடந்த மே மாதம் தனது Silver Jubilee (25-வது பேட்ச்) பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடிய இந்தத் திட்டம், சமூக மாற்றத்திற்கான தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தப் பாடத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, அரசு சாரா நிறுவனங்கள் (NGO), அரசு அமைப்புகள், ஐ.நா. நிபுணர்கள், சமூகத் தாக்க ஆலோசகர்கள், தொழில்முனைவோர் மற்றும் CSR துறை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே வகுப்பறையில் இணைந்து கற்கும் வாய்ப்பு அமைந்துள்ளது.

SPJIMR-இன் PGPDM தலைவர் பேராசிரியர் தனோஜ்குமார் மெஷ்ராம் கூறுகையில், “சமூகத் துறை இன்று தனித்து செயல்படுவதில்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து கற்றுக்கொள்வதன் மூலம் உண்மையான சமூக மாற்றத்திற்கான கூட்டாண்மைகள் உருவாகின்றன. PGPDM அதற்கான வலுவான தளமாக செயல்படுகிறது” என்றார்.

புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் ESG, வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு (AI), சமூக தொழில்முனைவு, பொதுக் கொள்கை (Public Policy) மற்றும் தகவல் தொடர்புத் திறன் ஆகிய ஐந்து முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பணிபுரியும் நிபுணர்களின் வசதிக்காக நெகிழ்வான ஆன்லைன் வகுப்புகள், புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டு முறை மற்றும் உத்தி, தரவு பகுப்பாய்வு, நிறுவன மற்றும் நிதி இணக்கம் உள்ளிட்ட விருப்பப் பாடங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தலைமைத்துவம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முறை எழுத்துத் திறனை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய அனுபவ அடிப்படையிலான (Experiential) கற்றல் ஆய்வகங்களும் (Labs) இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், SPJIMR-இன் முழுநேர மேலாண்மை மாணவர்களுடன் இணைந்து ஒரு ஆண்டு கால சமூக தாக்கத் திட்டத்தில் (Social Impact Project) பங்கேற்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சமூக வளர்ச்சி மற்றும் கார்ப்பரேட் மேலாண்மை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து நடைமுறை அனுபவம் பெற முடியும்.

இந்நிறுவனம் இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் புதிய மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள உள்ளது. இதன் மூலம் சுமார் 100 சமூகத் துறை நிபுணர்கள் ஒரே பேட்சில் இணைந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகி, நெட்வொர்க்கிங், அறிவுப் பரிமாற்றம் மற்றும் பல்துறை ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது 16-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் PGPDM, இதுவரை பல்வேறு சமூக நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், CSR பிரிவுகள் மற்றும் சமூகத் தொழில்முனைவு துறைகளில் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் முன்னாள் மாணவர்களை உருவாக்கியுள்ளது.

பேராசிரியர் தனோஜ்குமார் மெஷ்ராம் மேலும் கூறுகையில், “இந்தப் பாடத்திட்டம் வெறும் அறிவை வழங்குவதல்ல; சமூக வளர்ச்சிச் சவால்களை புதிய பார்வையுடன் அணுகி, நீடித்த மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *