‘ஆய்வு செய்வோம்’ மாத இதழ் வெளியீட்டு விழா: சென்னையில் நடைபெற்றது
சென்னை: தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், ‘ஆய்வு செய்வோம்’ எனும் மாத இதழின் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது.
விழாவிற்கு மாத இதழின் ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். ராம்ஜி வரவேற்புரை ஆற்றினார். மதன், உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இதழின் முதல் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயபந்தி வெளியிட, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ராமசுப்பிரமணி பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் வேல்முருகன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்துரை நிகழ்ச்சியில் பாலிமர் நியூஸ் செய்தி ஆசிரியர் வேல்ராஜ், அரசியல் ஸ்கேனர் ஆசிரியர் பிரதீப்குமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா குற்றப்பிரிவு ஆசிரியர் செல்வராஜ், தமிழன் தொலைக்காட்சி தலைமை செய்தியாளர் சகாயராஜ் மற்றும் கலையழகன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஜனநாயகக் காவலன் தலைமை செய்தியாளர் ஆண்டனி செல்வா நன்றியுரை வழங்கினார்.
பத்திரிகைத் துறையில் ஆய்வு மற்றும் சமூக விழிப்புணர்வை முன்னிறுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ்விழாவில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

