தமிழ் செய்திகள்

லாவா நிறுவனம் செக்மென்ட்டின் ஃபர்ஸ்ட் செகண்டரி அமோலெட் டிஸ்ப்ளே கொண்ட பிளேஸ் டியோ ஸ்மார்ட்போனை ₹14,999# விலையில் அறிமுகப்படுத்துகிறது

  • அதிகமான மல்டிடேஸ்கிங் செய்வதற்கும், பயனரின் சௌகரியத்துக்காகவும் தனித்துவமான 4.02cm (1.58″) செகண்டரி அமோலெட் ரியர் டிஸ்ப்ளே இடபெற்றுள்ளது
  • LPDDR5 RAM & UFS 3.1 ROM அதிக வேகத்தையும் குறைவான தாமதத்தையும் வழங்குகிறது
  • அருமையன போட்டோகிராஃபிக்கு சக்திவாய்ந்த 64MP சோனி சென்சார் ரியர் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா இடபெற்றுள்ளது
  • தடையின்றி சிறப்பாக வேலை செய்வதற்காக 2.5GHz மீடியாடெக் டைமென்சிட்டி 7025 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது
  • இரண்டு அழகான கலர்களில் வருகிறது: செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஆர்க்டிக் ஒயிட்
  • அதிரவைக்கும் விஷூவல் காட்சிகளுக்காக 16.94cm (6.67″) 120Hz 3D கர்வ்டு அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

சென்னை: இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனல் லிமிடெட், அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான லாவா பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்றைய தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட பயனர்களின் அதிகரித்துவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது, மிகச் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மற்றும் புதுமையான அம்சங்கள் என இரண்டையும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ₹14,999 (வங்கிச் சலுகைகள் உட்பட) என்ற அறிமுகச் சலுகை விலையில் விற்கப்கிறது. பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்போன் 6GB+6GB* மற்றும் 8GB+8GB* என இரண்டு வேரியன்ட்டுகளில் வருகிறது, இவை இரண்டும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகின்றன. பிளேஸ் டியோ ஸ்மார்ட்போனின் சிறப்பு விற்பனை டிசம்பர் 20 முதல் அமேசானில் தொடங்கும்.

பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்போன் 500K+ அண்டுடு ஸ்கோர் கொண்ட அட்வான்ஸ்டு மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது அனைத்து அப்ளிகேஷன்களும் சிறப்பாக வேலை செய்வதை உறுதி செய்கிறது. இதிலுள்ள தனித்துவமான 4.02cm (1.58″) செகண்டரி அமோலெட் ரியர் டிஸ்ப்ளே காரணமாக ரியர் கேமராவில் செல்ஃபி எடுப்பது, இன்கம்மிங் கால்ஸை பேசுவது, நோட்டிஃபிகேஷன்ஸைப் பார்ப்பது மற்றும் மியூசிக்கை கட்டுப்படுத்துவது போன்றவற்றை செய்வது மிகவும் எளிது. இதற்கு மெயின் ஸ்கிரீனை ஆன் செய்ய வேண்டியதில்லை.

லாவா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் புராடக்ட் பிரிவின் தலைவர் சுமித் சிங் கூறுகையில், ” ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்புகளில் ஒரு புரட்சியாக இந்த பிளேஸ் டியோ 5G பார்க்கப்படுகிறது, இது உயர்மட்ட தொழில்நுட்பம் மற்றும் பயனரை மையமாகக் கொண்ட வடிவமைப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தங்கள் தினசரி வாழ்க்கையில் மிகச் சிறந்த எஃபிஷியன்ஸி மற்றும் பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்க்கும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளேஸ் டியோ 5G எங்கள் நுகர்வோரின் ஸ்மார்ட்போன் அனுபவத்தில் புதிய சாதனைப் படைக்கும், அதன் மூலம் ஒப்பிடமுடியாத சௌகரியத்தையும் சீரான வாழ்க்கை முறையையும் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்போனில் ஒரு பிரமாண்டமான 16.94cm (6.67″) 120Hz 3D கர்வ்டு அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது, இது அதிரவைக்கும் விஷூவல் காட்சிகள் மற்றும் ஸ்மூத் ஸ்க்ரோலிங் ஆகியவற்றை வழங்குகிறது, இது ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. அதன் 64MP சோனி சென்சார் ரியர் கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா மூலம் பயனர்கள் அழகான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் டைப்-சி போர்ட் வழியாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இந்த பேட்டரி நீண்ட காலத்துக்கு உழைக்கிறது மற்றும் ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்கிறது.

லாவா பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:

  • 4.02cm (1.58″) செகண்டரி அமோலெட் ரியர் டிஸ்ப்ளே: மல்டிடேஸ்கிங், செல்ஃபி எடுப்பது மற்றும் நோட்டிஃபிகேஷன்ஸை நிர்வகிப்பதற்கு ஏற்றது.
  • LPDDR5 RAM & UFS 3.1 ROM: LPDDR 5 RAM அதிக வேகம் மற்றும் அதிக அலைவரிசையை வழங்குகிறது, அதேசமயம் UFS 3.1 ROM அதன் முந்தைய ஜெனரேஷனுடன் ஒப்பிடும்போது 2X எழுதும் வேகம் மற்றும் குறைவான தாமதத்தை வழங்குகிறது.
  • 16.94cm (6.67″) 120Hz 3D கர்வ்டு அமோலெட் டிஸ்ப்ளே: அதிரவைக்கும் காட்சிகள் மற்றும் ஃப்ளூயிட் யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
  • மீடியாடெக் டைமென்சிட்டி 7025 சிப்செட்: தடையற்ற மல்டிடேஸ்கிங் மற்றும் கேமிங் பெர்ஃபார்மென்ஸை உறுதி செய்கிறது.
  • 64MP சோனி சென்சார் ரியர் கேமரா & 16MP செல்ஃபி கேமரா: பிரமாண்டமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சிரமமின்றி எடுக்கிறது.
  • 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி: நீண்ட கால பேட்டரி ஆயுள் மற்றும் விரைவான சார்ஜிங்கை வழங்குகிறது.
  • சமீபத்திய அண்ட்ராய்டு 14 (அண்ட்ராய்டு 15 க்கு அப்கிரேட் செய்யலாம்): பயனர் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்படும்.
  • பிளேஸ் டியோ 1 வருட வாரன்ட்டியுடன் வருகிறது மற்றும் வீட்டிற்கே வந்து ஃப்ரீ-சர்வீஸ் வழங்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய பிறகு மன அமைதியும் சிறந்த ஆதரவும் கிடைக்கிறது.

வீட்டிற்கு வந்து சர்வீஸ் வழங்க, இங்கே கிளிக் செய்யவும்: https://www.lavamobiles.com/lava_service_at_home/

விலை மற்றும் கிடைக்கும் நிலவரம்

பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்ஃபோன் அழகான வடிவமைப்புடன் வருகிறது, இது இரண்டு கவர்ச்சிகரமான கலர்களில் பிரீமியம் மேட் ஃபினிஷுடன் வருகிறது – செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஆர்க்டிக் ஒயிட். மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சௌகரியத்துக்காக இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. பிளேஸ் டியோ 5G ஸ்மார்ட்ஃபோன் டிசம்பர் 20, 2024 அன்று அமேசானில் பிரத்தியேகமாக, ₹14,999# (வங்கிச் சலுகைகள் உட்பட) என்ற அறிமுகச் சலுகை விலையில் விற்ப.னை செய்யப்படும்.

வேரியன்ட்விலை (MOP)அறிமுகச் சலுகை விலை#
6GB+6GB*₹16,999₹14,999#
8GB+8GB*₹17,999₹15,999#

#2K வங்கிச் சலுகை டிசம்பர் 20, 2024 முதல் டிசம்பர் 22, 2024 வரையிலும் HDFC வங்கி கிரெடிட்/டெபிட் கார்டு டிரான்ஸாக்ஷன்களுக்குப் பொருந்தும்

பிளேஸ் டியோ பற்றிய விவரங்கள்

Screen Size (“)16.94 cm (6.67”)
DisplayFHD+ 3D Curved AMOLED
Refresh Rate120Hz
Battery5000mAh
Camera (MP) Back64MP (Primary, Sony Sensor) + 2MP (Macro)
Camera (MP) Front16MP
ChipsetMediaTek Dimensity 7025 (6nm Processor)
Antutu500K+
RAM (GB)6GB + 6GB*8GB + 8GB*
ROM (GB)128GB UFS 3.1
FingerprintIn-Display Fingerprint Sensor
Charger33W Fast Charger, 50% charge in  36 minutes
Cable TypeC2C Type
OSAndroid 14
SpeakerSingle Speaker
Free Home ServiceYes
Anonymous Auto Call RecordingYes
Warranty1 Year Replacement and 6 Months Warranty on Accessories
Secondary Display Size (“)4.02 cm (1.58”)
Secondary Display TypeAMOLED

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *