Politics

பப்புவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் ஆந்திர முதல்வருக்கு நேரில் வாழ்த்து

ஆந்திரா, விஜயவாடா: ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பப்புவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் நடைபெற்ற ஆந்திர அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட விஷ்ணு பிரபு, சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

மேலும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், ஆந்திரா மாநிலம் மற்றும் பப்புவா நியூ கினியா நாடு இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *