மேற்கு தாம்பரத்தில் புதிய விற்பனை நிலையம் திறந்தது தனிஷ்க்
சென்னை: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை ரீடெய்ல் பிராண்டான Tanishq, சென்னை மேற்கு தாம்பரத்தில் தனது புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்து, தமிழ்நாட்டில் தனது வணிக விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த திறப்பின் மூலம், மாநிலத்தில் 66-வது மற்றும் சென்னை மாநகரத்தில் 24-வது கடை என்ற முக்கிய மைல்கல்லை நிறுவனம் எட்டியுள்ளது.
மேற்கு தாம்பரம், எண் 257, ஜி.எஸ்.டி சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த 8,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட விற்பனை நிலையம், வாடிக்கையாளர்களுக்கு நவீன மற்றும் வசதியான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய விற்பனை நிலையத்தை, அந்நிறுவனத்தின் நகை பிரிவின் முதன்மை செயல் அதிகாரி அருண் நாராயண் மற்றும் தமிழ்நாடு, கேரளா தலைமை அதிகாரி நரசிம்மன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திறப்பு விழாவை முன்னிட்டு, மே 1 முதல் மே 3, 2026 வரை, வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தில் தங்க நகைகள், வைர நகைத் தொகுப்புகள், சாலிட்டையர்கள், போல்கி வடிவங்கள், அன்றாட பயன்பாட்டிற்கான நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகள் விற்பனைக்கு உள்ளன. மேலும், ஆன்ட்டிக் நகைகள், தென்னிந்திய குந்தன் வடிவமைப்புகள் மற்றும் இயற்கை ரத்தினக் கற்களால் செய்யப்பட்ட ‘Hues’ கலெக்ஷன் போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இந்த கடையில் “Tanishq Diamond Expertise Centre” அமைக்கப்பட்டுள்ளது. இது வைரங்களின் உண்மைத்தன்மை, தரம் மற்றும் ஒளிர்வுத்தன்மையை ஆய்வு செய்ய உதவும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்படுகிறது.
திறப்பு விழாவை முன்னிட்டு அருண் நாராயண் கூறுகையில், தமிழ்நாடு எப்போதும் நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாக இருந்து வருவதாகவும், புதிய கடை மூலம் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மேலாளர் தினேஷ் குமார் தெரிவித்ததாவது, இந்த புதிய கடை மூலம் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைகளுக்கு ஏற்ப நுணுக்கமான மற்றும் பல்வேறு வடிவமைப்புகள் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.

