சென்னையில் புரோட்டீன் உணவுகளுக்கான தேவை அதிகரிப்பு: Instamart-ல் ₹2.71 லட்சம் மதிப்பிலான ஒற்றை ஆர்டர் பதிவு
சென்னை: இந்தியாவில் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், quick commerce தளமான Instamart-ல் புரோட்டீன் சார்ந்த பொருட்களுக்கான ஆர்டர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவையை முன்னிட்டு, Instamart தனது புரோட்டீன் தயாரிப்புகளின் வரிசையை 10,000 SKU-களாக விரிவுபடுத்தியுள்ளது. இதில் புரோட்டீன் ஓட்ஸ், கிரீக் யோகர்ட், புரோட்டீன் பார்கள், புரோட்டீன் ஸ்நாக்ஸ், பிளாண்ட்-பேஸ்டு புரோட்டீன் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நிறுவனத்தின் தரவுகளின்படி, சென்னை நகரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரே ஆர்டரில் ₹2,71,385 மதிப்பிலான புரோட்டீன் பொருட்களை வாங்கியுள்ளார். இதில் பெரும்பாலானவை நிலக்கடலை அடிப்படையிலான புரோட்டீன் பொருட்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-ம் ஆண்டில் Instamart-ல் அதிகம் தேடப்பட்ட புரோட்டீன் தொடர்பான சொற்களில் பீனட் பட்டர் முதலிடத்தையும், கிரீக் யோகர்ட் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
புரோட்டீன் உணவுப் பொருட்களில் முட்டை மற்றும் பனீர் இந்தியர்களின் முதன்மைத் தேர்வாகத் தொடர்கின்றன. முட்டை-பனீர் இணைப்பு இந்தியாவின் மிகவும் பிரபலமான புரோட்டீன் கார்ட் காம்போவாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில், புரோட்டீன் ஸ்நாக்ஸ் பிரிவு ஆண்டு தோறும் சுமார் 300 சதவீத வளர்ச்சியையும், புரோட்டீன் யோகர்ட் பிரிவு 280 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. சோயா சங்க்ஸ் மற்றும் சத்து போன்ற பாரம்பரிய இந்திய புரோட்டீன் உணவுகளுக்கான தேவை 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
பெங்களூரு புரோட்டீன் நுகர்வில் முன்னணியில் இருந்தாலும், நாக்பூர், ஜெய்ப்பூர், சண்டிகர், புவனேஸ்வர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட Tier-II நகரங்களில் புரோட்டீன் ஆர்டர்கள் மெட்ரோ நகரங்களை விட 200 சதவீதம் வேகமாக வளர்ந்து வருவதாக Instamart தெரிவித்துள்ளது.
Instamart நிறுவனத்தின் Chief Business Officer ஹரி குமார் கூறுகையில், “இந்தியாவில் ‘better-for-you’ உணவுப் பழக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. உயர் புரோட்டீன் உணவுகளை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக அணுகும் வகையில் பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறோம். இது இந்தியர்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப் பழக்கங்களில் நிகழும் முக்கியமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.
மேலும், காலை 7 மணி முதல் 11 மணி வரை புரோட்டீன் பொருட்களுக்கான ஆர்டர்கள் அதிகமாக பதிவாகின்றன என்றும், உடற்பயிற்சிக்குப் பிறகான நேரங்களில் இரண்டாவது உச்சம் காணப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் உடற்தகுதி மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், புரோட்டீன் உணவுப் பொருட்களின் பயன்பாடு நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களிலும் வேகமாக பரவி வருவதாக Instamart ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

