காஞ்சிபுரத்தில் இயற்கை எரிவாயுக் குழாய் சேதம்: THINK Gas நிறுவனம் உடனடி சீரமைப்பு
காஞ்சிபுரம்: பெரும்பாக்கம் இந்திரா நகரில் மின் கம்பங்கள் அமைக்கும் பணியின்போது, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்ததாரரால் THINK Gas நிறுவனத்தின் இயற்கை எரிவாயுக் குழாய் சேதமடைந்தது.
இதையடுத்து, தகவலறிந்த THINK Gas நிறுவனத்தின் அவசரகாலக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் எரிவாயு விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, குழாயைச் சீரமைத்தனர். பின்னர், அப்பகுதியில் எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக உரிய முன் தகவல் அளிக்காமல் அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நிறுவனம் அதிகாரப்பூர்வப் புகார் அளித்துள்ளது.
மேலும், குழாய் வழித்தடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக, ‘தோண்டுவதற்கு முன் அழையுங்கள்’ (Dial Before You Dig) என்ற பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றி, நிறுவனத்திடம் முன்கூட்டியே அனுமதி மற்றும் வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என THINK Gas வலியுறுத்தியுள்ளது.
இதற்காக 1800 2022 999 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

