அகமுடையார் சமுதாய மக்களுக்கான திருமண வரன் அறிமுக விழா
அகமுடையார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகமுடையார் திருமண தகவல் மையம் சார்பில் அகமுடையார் சமுதாய மக்களுக்கான திருமண வரன் அறிமுக விழா, திருமண வரன்களின் பெற்றோர் சந்திப்பு மற்றும் ஜாதகம் பதிவு விழா சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகையில் நடைபெற்றது.
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளை தலைவர் சுப. அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வாக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் இராவணன் ஞானசுந்தரம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, மருது பாண்டியர்களின் படத்திற்கு மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வரன் தேடும் மணமகன்/மணமகளின் தகவல்களை அவர்களது பெற்றோர்கள் பதிவு செய்துகொண்டனர். பதிவு கட்டணமாக ரூபாய் 300 வசூலிக்கப்பட்டது.
திருமண வரன்களுக்கான பதிவு முகாம்
வரன் தேடும் மணமகன்/மணமகளின் விவரங்களை முகாமில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி திரையில் காட்சிப்படுத்தினர்.
காட்சிப்படுத்தப்பட்ட மணமகன்/மணமகளின் பெற்றோர்களை நேரடியாக முகாமிலேயே சந்தித்து பேசவும் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், கே கணேசன், வி. அன்புச் செல்வன், டாக்டர் டி. செந்தமிழ் பாரி, இராவணன் ஞானசுந்தரம், எஸ் ராமச்சந்திரன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. சரவணகுமார், ஆர். சுந்தரவதனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய வாக்ஸ் குருப் ஆப் கம்பெனியின் சேர்மன் இராவணன் ஞானசுந்தரம்,
அகமுடையார் சமுதாயத்தில் நலிந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் கல்விலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.
அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அகமுடையார் சமுதாயத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வைத்துள்ளவர்கள் இலவசமாக பல்வேறு விதமான நோய்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முன் வர வேண்டும்.
பொறியியல் கல்லூரிகள் வைத்துள்ளவர்களும் அகமுடையார் சமுதாயத்தில் நலிந்தவர்களாக இருப்பவர்களுக்கு இலவச கல்வியும், பல்வேறு தொழிற்சாலைகளை வைத்துள்ளவர்கள் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வரன் பதிவிற்கு 72005 07629 / 94455 05061 என்ற Whatsapp எண்ணிலும் www.agamudayarmatri.com என்ற இணையத்திலும், மேட்ரி அப்ளிகேஷன் என்ற மொபைல் ஆப் மூலமும் வரன்களை தேர்வு செய்யலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர்.