அம்பத்தூர் KFC-யில் டெலிவரி செய்யப்பட்ட சமைக்காத சிக்கன்
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் ஸ்விகி ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் KFC ல் SMOKY GRILLED CHICKEN ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்யப்பட்ட உணவு டெலிவரி செய்யப்பட்ட நிலையில் வாடிக்கையாளர் அதனை உண்ண முயற்சித்தபோது அது சரிவர வேகாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து KFC அம்பத்தூர் கிளையில் புகாரளித்த நிலையில் எந்தவித பதிலும் அளிக்காததால் தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி பதிவிட்டு SWIGGY நிறுவனம், KFC நிறுவனம் மற்றும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) ஆகியவற்றை TAG செய்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஸ்விகி மற்றும் KFC நிறுவனங்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் உறுத்தியளித்துள்ளது.
பிரபல உணவகத்தில் சமைக்காத சிக்கன் வாடிக்கையாளருக்கு வழங்கபட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.