தமிழ் செய்திகள்

‘ஐந்தாம் வேதம்’ திரில்லர் வெப் சீரிஸ்; ZEE 5-ல் அக்டோபர் 25ஆம் தேதி முதல்

சென்னை: 90களின் புகழ்பெற்ற புராண சாகச திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸின் டீசரை ZEE 5 வெளியிட்டுள்ளது. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்த புராணத் தொடரில், சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஒளிபரப்பப்படவுள்ளது.

விரைவில் வெளிவரவுள்ள இந்த சீரிஸின் டீசர், இதன் மீதான ஆவலை ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது.

கதையில், அனு எனபவர் தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்தக்கதை தொடங்குகிறது. வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் – ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது.

தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பது தான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம். ZEE 5 – இல் அக்டோபர் 25-ஆம் தேதி ஸ்ட்ரீமாகும் ஐந்தாம் வேதம் சீரிஸின் மூலம் மர்மங்கள் அடங்கிய புதிய சாகசத்தில் இணையுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *