தமிழ் செய்திகள்

சென்னை குரோம்பேட்டையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 37-வது ஷோரூம் திறப்பு

சென்னை: முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தமிழ்நாட்டில் தனது 37-வது ஷோரூமை சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தது.

புதிய ஷோரூமை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடராமன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிகத் தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டலத் தலைவர் அமீர் பாபு, தமிழ்நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், குரோம்பேட்டை கிளைத் தலைவர் சுஹைல் உள்ளிட்ட நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஷோரூமில் விசாலமான விற்பனை அரங்கம், சமீபத்திய வடிவமைப்புகளில் தங்கம், வைரம், வெள்ளி மற்றும் விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களின் விரிவான தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மொத்தம் 37 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஷோரூமில் வைர நகைகளுக்கான ‘மைன்’, வெட்டாத வைர நகைகளுக்கான ‘எரா’, விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட ‘பிரீசியா’, கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய ‘எத்தினிக்’, பாரம்பரிய இந்திய வடிவமைப்புகளைக் கொண்ட ‘டிவைன்’, குழந்தைகளுக்கான ‘ஸ்டார்லெட்’ உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக நகைத் தொகுப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *