விஜய் பதவியேற்பு விழாவில் இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல்
சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் விஜய் பதவியேற்பு விழாவில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிலையங்களிலும் தேசிய கீதத்துடன் சேர்த்து வந்தே மாதரம் பாடலை படவேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஆணை பிறப்பித்ததது.
இருப்பினும் சில மாநிலங்களில் அந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை. தமிழகத்திலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படவில்லை.
தற்போது, விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் வந்தே மாதரம் பாடல், அதனை தொடர்ந்து தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.
தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாக நமது தேசிய கீதம் முதலில் பாடப்படுகிறது.

