தமிழ் செய்திகள்

வாக்களித்தால் ரூ.5,000 தள்ளுபடி: பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் சிறப்பு சலுகை

சென்னை: தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம் “GO VOTE. GET INKED. CELEBRATE THE MOVEMENT” என்ற பிரச்சாரத்தின் கீழ் ரூ.5,000 உடனடி தள்ளுபடி வழங்கும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இந்த சலுகையை நிறுவனத்தின் தலைவர் குஷால் கங்காரியா, நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இணைந்து அறிமுகப்படுத்தினர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாக்களித்ததற்கான சான்றாக சுட்டுவிரலில் அழியாத மை குறியுடன் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் ஷோரூம்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும். இந்த சலுகை ஏப்ரல் 30, 2026 வரை செல்லுபடியாகும்.

இந்த முயற்சி குறித்து குஷால் கங்காரியா கூறுகையில், “வாக்களிப்பதே ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் நாட்டை வலுப்படுத்துகிறது. வாக்களித்த மக்களை கௌரவிக்கும் விதமாகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

நிர்வாக இயக்குநர் தினேஷ் கங்காரியா தெரிவித்ததாவது, “தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாக்களித்திருந்தாலும், சென்னையில் உள்ள எங்கள் ஷோரூம்களில் விரல் மை குறியைக் காட்டி இந்த சலுகையை பெறலாம். வாக்களிப்பு விழிப்புணர்வை அதிகரிப்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மகேஷ் பாபு, “வாக்களிப்பது ஒரு கடமை மட்டுமல்ல, அது பெருமை” என்ற வாசகத்துடன் வாக்காளர்களை உற்சாகப்படுத்தினார். அவர் பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக உள்ளார்.

60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் சேவையாற்றி வருகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் தரம் மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்றதாகும்.

இந்த சலுகை 2026 ஏப்ரல் 23 அன்று வாக்களித்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாங்கும் போது விரல் மை குறியைக் காட்ட வேண்டும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *