உலகளாவிய விமானத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்; சென்னையில் நடைபெற்றது
சென்னை: ஆர்ம்ஸ் ஏவியேஷன் (ARMZ Aviation) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (TATTI) ஆகியவை இணைந்து நடத்திய “Global Aviation Conclave 2026 – 1.0” என்ற உலகளாவிய விமானத் துறை வேலைவாய்ப்பு மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்வு சென்னை தரமணியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விமானத் துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள், தொழில்முறை பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து மற்றும் விமான நிலைய செயல்பாடுகள் தொடர்பான பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது பணியாளர் தேவைகளை அறிமுகப்படுத்தின.
Sky Blue Aviation, Aerotech FMS, INDIAONE Air, SMARTWINGS Helicopters, Kwik Flight Support உள்ளிட்ட விமான இயக்கம் மற்றும் ஏரோநாட்டிக்கல் துறையைச் சேர்ந்த நிறுவனங்களும், BluNav Aviation, Blue Dart Cargo, Sri Lankan Cargo, AISATS, Indo Thai, Menzies Bobba, RAMP360, Bird Worldwide Flight Services உள்ளிட்ட விமான நிலைய செயல்பாடுகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் நிகழ்வில் பங்கேற்றன.
மாதம் ரூ.15,000 முதல் ரூ.40,000 வரை ஊதியம் வழங்கும் பல்வேறு பணியிடங்கள் குறித்து இளைஞர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. Airport Ground Staff, Flight Dispatcher, Airport Cargo Staff, Airport Ramp Staff மற்றும் Airline Security Staff உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
விமானத் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறந்த தளமாக இந்த நிகழ்வு அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

