தமிழ் செய்திகள்

உருது மொழி மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு உருது அகாடமி துணைத் தலைவர் நன்றி

சென்னை: தமிழ்நாட்டில் உருது மொழியின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர் எம்.டி. நயீமுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாட்டில் உருது மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில உருது அகாடமி தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.

உருது மொழியின் வளர்ச்சிக்காக அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் ஆகியோரின் நடவடிக்கையால் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் நயீமுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த நிதியின் மூலம் உருது மொழிக் கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கைகள், மொழி சார்ந்த திட்டங்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என அவர் கூறினார்.

உருது மொழியைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக இருப்பதாகவும் டாக்டர் எம்.டி. நயீமுர் ரஹ்மான் தெரிவித்தார்.

உருது மொழி மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *