சர்வதேச பாரம்பரிய சிலம்பம் போட்டியில் சென்னை சிலம்ப வீரர்கள் சாதனை
சென்னை: இந்திய இளையோர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் சார்பாக புதுச்சேரியில் சர்வதேச அளவிலான சர்வதேச பாரம்பரிய சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 5 முதல் 21 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
சென்னையின் பெரும்பாக்கம், கோட்டூர்புரம், பட்டினம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிலம்ப வீரர்கள் குழுவாக இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
பட்டினம்பாக்கம் ராவண சிலம்ப கூடத்தின் தலைமை ஆசான் முகிலன், திருவான்மியூர் அணியின் ஆசான் ராம், கோட்டூர்புரம் பெரும்பாக்கம் வீரத்தமிழ் சிலம்பக்கூடதட்டின் தலைமை ஆசான் அப்துல்லா ஆகியோரின் தலைமையில் சுமார் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, வேல்கம்பு, சுருள்வால் போட்டியில் விளையாடிய சென்னை வீரர்கள் மிக அற்புதமாக விளையாடி 55 தங்கப்பதக்கங்களை வென்று சென்னைக்கு பெருமை தேடி தந்துள்ளார்கள்.