தமிழ் செய்திகள்

சென்னையில் ‘The Art of Yoga: 3335 Yogasana and Sadhana’ புத்தகம் மற்றும் இசை ஆல்பம் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது

சென்னை: உடல், மனம் மற்றும் ஆன்மாவின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட “The Art of Yoga: 3335 Yogasana and Sadhana” என்ற பிரம்மாண்ட யோகா நூலும், அதனுடன் இணைந்த இசை ஆல்பமும் சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டன.

மதிப்பிற்குரிய ஆன்மீக குரு சுவாமி தன்வீர் தயானந்த யோகி ஜி எழுதிய இந்த நூல், பழமையான யோக மரபுகளையும் நவீன நடைமுறைப் பயிற்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 3,335 யோகாசனங்கள் மற்றும் சாதனா முறைகள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன. யோகா பயிற்சியைத் தொடங்கும் ஆரம்பநிலை பயிற்சியாளர்கள் முதல் ஆழமான ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ள சாதகர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வழிகாட்டி நூலாக இது அமைகிறது.

இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் ரிஷி ரித்விக், புலவர் பட்டிமன்றப் பேச்சாளர் ராமலிங்கம், பேச்சாளர் மதுரை ராமகிஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நூல் மற்றும் இசை ஆல்பத்தைப் பாராட்டினர். மேலும் அரசுத் துறை அதிகாரிகள், பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், திரைப்படத் துறையினர், சர்வதேச யோக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியபோது, யோகாவின் பாரம்பரிய அறிவையும் அதன் ஆன்மீகப் பயன்களையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த நூலும் இசை ஆல்பமும் அமைந்துள்ளதாக பாராட்டினர். யோகா மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முக்கியமான படைப்பாக இது விளங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நூல் வெளியீடு மற்றும் இசை ஆல்பம் அறிமுகம் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, யோகா, ஆன்மீகம் மற்றும் இசை ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் கொண்டுவந்த அரிய நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *