ட்ரெண்டிங் ஜோடி – சின்னத்திரை பிரபலங்களின் பேஷன் ஷோ சென்னை, கோவையில் நடைபெறுகிறது
சென்னை ஜூன் 7: சினி டோர் ஸ்டுடியோஸ் வழங்கும் ட்ரெண்டிங் ஜோடி எனப்படும் தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்குபெறும் மாபெரும் பேஷன் ஷோ நிகழ்ச்சி வருகின்ற ஜூலை மாதம் 13-ஆம் தேதியன்று சென்னை தி.நகரில் உள்ள வாணிமஹாலிலும், ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதியன்று கோவையிலும் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-ல் நடைபெற்றது. அப்போது சினி டோர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஷீலா, பேஷன் ஆடை வடிவமைப்பாளர் வினோத், ராக் ஈவென்ட்ஸ் மணி, தயாரிப்பாளர் கருணாகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
தொலைக்காட்சி பிரபலங்கள் பங்கு பெரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் ஒரு பகுதி புற்று நோயாளிகள் மருத்துவ செலவினங்களுக்காகவும், ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் பயன்படுத்தப்பட போவதாக சினி டோர் ஸ்டூடியோஸின் இயக்குனர் ஷீலா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், பிரபல யுட்யூபர்கள் பங்குபெறும் டிஜிட்டல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் சீசன் 2-விற்கான ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது.