வாக்ஸ் குழும 18 ஆம் ஆண்டு நிறுவனர் தினம்
சென்னை: வாக்ஸ் குழுமத்தின் வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளை சார்பாக 18 – வது நிறுவனர் தினம் கடந்த 7-ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வாக்ஸ் அறக்கட்டளை மூலம் 600-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் பார்வையற்ற பெற்றோரின் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை மூலம் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வாக்ஸ் குழுமத் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குழும இயக்குநர்கள், கவிதா இராவணன் மற்றும் இந்திரஜித் இராவணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகான காசோலைகளை வழங்கினர்.
ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி இராஜரத்தினம், முன்னாள் ரோட்டரி கவர்னரும் எமரால்ட் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஒளிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
வாக்ஸ் குழுமம், ஆண்டுதோறும் தனது குழும நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்குகிறது.
தொழிலதிபர் ஞானசுந்தரம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வாக்ஸ் குழுமத்தின் தலைவர் இராவணன் ஞானசுந்தரம் வாக்ஸ் அறக்கட்டளையை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி நிறுவனர் தினத்தை கொண்டாடி வருகிறார்.