தமிழ் செய்திகள்

மயிலாப்பூர் மஹாபெரியவா கோயிலில் ‘In the Footsteps of Periyava’ நூல் வெளியீடு

சென்னை: மஹா பெரியவாளின் அத்யந்த பக்தரும், அமெரிக்காவில் ஆன்மீக உபன்யாசங்களை தொடர்ந்து நடத்தி வருபவருமான எஸ்.ஆர். கிருஷ்ணன் எழுதிய ‘In the Footsteps of Periyava’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள மஹாபெரியவா கோயிலில் நடைபெற்றது.

மஹா பெரியவா தனது வாழ்நாளில் நிகழ்த்திய அற்புதங்கள், பக்தர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் மற்றும் அவரது ஆன்மீக வாழ்வில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் கிரி டிரேடிங் ஏஜென்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டு விழாவில், மஹா பெரியவாளின் மீது பரம பக்தி கொண்டவரும், ஆன்மீக சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான சுவாமிநாதன் நூலை வெளியிட்டார். மயிலாப்பூர் மஹா பெரியவா கோயில் டிரஸ்டியும், மஹா பெரியவாளின் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவருமான கணேஷ் ஷர்மா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களை கிரி டிரேடிங் ஏஜென்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் ராமநாராயணன், ஸ்ரீனிவாசன் மற்றும் விற்பனைப் பிரிவுத் தலைவர் அமர் கிரிஷ் ஆகியோர் கௌரவித்தனர்.

மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிரி டிரேடிங் ஏஜென்சி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மஹா பெரியவாளின் வாழ்க்கை, ஆன்மீகப் பார்வை மற்றும் பக்தர்களுக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ‘In the Footsteps of Periyava’ நூல் பயனுள்ள ஆன்மீக வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *