தமிழ் செய்திகள்

ட்ரூகாலரின் திறனாற்றலை ஐ-ஃபோனில் பெறலாம்

சென்னை: உலகளவில் முன்னணி தகவல் தொடர்பு இயங்கு தளமாகத் திகழும் ட்ரூ காலர், முன்னெப்போதுமில்லாத வகையில் ஐ-ஃபோனுக்கான மிக பெரிய புதுப்பித்தலை அறிவித்தது.

இந்த புதிய புதுப்பித்தல், ஸ்பேம் மற்றும் ஸ்கேம் அழைப்புக்களைத் தடுக்கும் முழு ட்ரூகாலரின் திறனாற்றலையும் ஐ-ஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு அனைத்து இடங்களிலும் வழங்குகிறது!

இப்போது அனைத்து வகையான அழைப்புக்களையும் அடையாளம் காணும் ஆற்றலுடன் அதன் ஆண்ட்ராய்ட் மறுபடிவத்துக்கு இணையாக இயங்கும் திறனைக் கொண்டிருக்கிறது. லைவ் காலர் ID தனியுரிமையை பேணிக் காப்பதற்கான நடைமுறைகளின் அடிப்படையில் வழங்குவதற்காக, ட்ரூ காலர் போன்ற ஆப்ஸ்களுக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட ஆப்பிள் இன் லைவ் காலர் ID லுக் அப் கட்டமைப்பு இந்த சாதனையை சாத்தியப்படுத்தியது. இந்த API stet ஆப் தி ஆர்ட் ஹோமோ மார்ஃபிக் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஆற்றல்மிக்க ட்ரூ காலர் அனுபவம் இப்போது ஐ-போனில்:

தேவையற்ற அழைப்புக்களை தடை செய்து அகற்றும் பணியில் ட்ரூ காலர் கடந்த் 15 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்த தற்போதைய புதுப்பித்தல் இயன்றவரை அதிகளவிலான அழைப்புக்களை அடையாளம் காண்பதற்கான ட்ரூகாலரின் சமீபத்திய AI செயல்திறனையும் மற்றும் உலகளவிலான அதன் தரவுத் தளத்தை மேம்படுத்த உதவும்.

iOS கருவி மூலம் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அழைப்பு குறித்த தகவல்களும் ட்ரூ காலரில் இருக்கும் வரை எந்த ஒரு அழைப்பும் அடையாளம் காணப்படாமல் விடப்பட்டுவிடாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *