‘மெக்டொனால்டு’ஸ் இந்தியா’ அறிமுகம் செய்யும் மெக்கிரிஸ்பி சிக்கன் பர்கர் மற்றும் முதன் முதலாக கிரிஸ்பி வெஜி பர்கர்
சென்னை: இந்த ஆண்டு பண்டிகை சீசனுக்கு மெக்கிரிஸ்பி சிக்கன் பர்கர் மற்றும் கிரிஸ்பி வெஜி பர்கர் என்ற இரு ப்ரீமியம் பர்கர்கள் அறிமுகம் செய்யப்படுவதை மெக்டொனால்டு’ஸ் இந்தியா (W&S) அறிவித்திருக்கிறது. உலகளவில், எண்ணற்றவர்களின் அபிமானம் பெற்ற மெக்கிரிஸ்பி சிக்கன் பர்கர் அறிமுகம் செய்யப்படுவதை இந்தியாவே ஆவலோடு எதிர்நோக்கியிருந்தது.
இதனோடு சேர்த்து தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கும் கிரிஸ்பி வெஜி பர்கரும் இந்தியாவில் அறிமுகமாகிறது. மாறுபட்ட சுவை விருப்பங்களைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் வயிற்றை நிரப்பும் மெனு விருப்பத்தேர்வுகளை வழங்குவதில் மெக்டொனால்டுஸ் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த புதிய அறிமுகங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சிக்கன் ஃபில்லெட் பேட்டி (patty), ஒரு தனித்துவமான கிளேஸ்டு பன், ஃபிரஷ்ஷான லெட்யூஸ் மற்றும் க்ரீமி பெப்பர் மயோ சாஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததாக மெக்கிரிஸ்பி சிக்கன் பர்கர் தயாரிக்கப்படுகிறது. பர்கர் வகையினத்தில் ஒரு புதிய தரநிலையை நிறுவும் வகையில், அற்புதமான சுவையுடன் கூடிய மொறுமொறுப்பான சிக்கன் அனுபவத்திற்கு இந்த பர்கர் உத்தரவாதமளிக்கிறது.
கிரிஸ்பி வெஜி பர்கர் என்பது, வெஜிடேரியன் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட புதிய அறிமுகமாகும். கத்தரிக்காய், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், மஞ்சள் மற்றும் பச்சை வெள்ளரிக்காய் மற்றும் ஃபிரென்ச் பீன்ஸ் ஆகியவை உட்பட, ஏழு உயர்தர காய்கறிகளின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகின்ற ப்ரீமியம் கிரிஸ்பி வெஜிபேக்கி இதில் இடம்பெற்றுள்ளது. கிளேஸ்டு பன் மற்றும் சுவையான காக்டெய்ல் மயோ சாஸ் ஆகியவையும் இடம்பெறும் இந்த பர்கர், அற்புதமான சுவையையும், மொறுமொறுப்பையும் வழங்குவதற்கெனவே தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மெக்டொனால்டுஸ் இந்தியாவின் உரிமையாளரான வெஸ்ட்லைஃப் ஃபுட்வேர்ல்டு – ன் செயலாக்க இயக்குனர் திரு, அக்ஷய் ஜாட்டியா பேசுகையில், “உலகளவில் புகழ்பெற்ற மெக்கிரிஸ்பி சிக்கன் பர்கரையும் மற்றும் முற்றிலும் புதிய கிரிஸ்பி வெஜ் பர்கரையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். எமது புராடக்ட் புத்தாக்கப் பயணத்தில் இந்த அறிமுகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாகும். மிகச்சிறந்த சர்வதேச, தயாரிப்புகளை இந்திய மக்களுக்காக வழங்குவதில் எமது பொறுப்புறுதியையும் மற்றும் அதே வேளையில் எமது வெஜிடேரியன் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதிலும் நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இந்த புதிய அறிமுகம் பிரதிபலிக்கிறது. எங்களது மிகச்சிறப்பான, அதிக உற்சாகமளிக்கும் அறிமுகங்களில் ஒன்றாக இவைகள் இருக்கின்றன. இத்தொழில்துறையின் நடப்பு நிலையையே முற்றிலும் மாற்றக்கூடிய திறன் கொண்டதாக இப்புதிய பர்கர்கள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் பர்கர் வகையினத்தின் வளர்ச்சி என்ற இலக்கிற்கு கணிசமான பங்களிப்பை இப்புதிய தயாரிப்புகளின் அறிமுகம் வழங்கும் என்பது எங்களது நம்பிக்கை.” என்று கூறினார்.