சென்னை சமஸ்கிருத கல்லூரி டிஜிட்டல் கேம்பஸ்-ன் புதிய லோகோ மற்றும் மைக்ரோ வெப்சைட் அறிமுகம்
சென்னையில் கடந்த 117 ஆண்டுகளாக இயங்கி வரும் பழமையான சென்னை சமஸ்கிருத கல்லூரி தனது டிஜிட்டல் கேம்பஸ் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களுக்கு சமஸ்கிருத மொழி பயிலும் வாய்ப்பினை வழங்கி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த சேவையினை இக்கல்லூரி வழங்கி வரும் நிலையில், டிஜிட்டல் கேம்பஸிற்கான புதிய லோகோ மற்றும் மைக்ரோ வெப்சைட்டினை இன்று அறிமுகம் செய்தது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.எம்.ஏ. ஹாலில் நடைபெற்ற சமஸ்கிருத மொழி மாநாட்டில் இந்த அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.சி.எஸ். நிறுவனத்தின் மண்டல துணை தலைவர் சுரேஷ் ராமன், சென்னை சமஸ்கிருத கல்லூரியின் அறங்காவலர்கள் ரமேஷ் மகாலிங்கம், சந்தான கிருஷ்ணன், ஆனந்த மாதவன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சென்னை சமஸ்கிருத கல்லூரி டிஜிட்டல் கேம்பஸ்-ன் புதிய லோகோ மற்றும் மைக்ரோ வெப்சைட்டினை அறிமுகம் செய்து வைத்தனர்.
சென்னை சமஸ்கிருத கல்லூரியின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் மஹாலிங்கம் கூறுகையில், சமஸ்கிருதத்தின் செழுமையான பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் அதே வேளையில், நவீன தொழில்நுட்பத்தையும் அரவணைத்து இணைத்துக் கொள்வதில் எமது பொறுப்புறுதியை எமது புதிய அடையாளம் பிரதிபலிக்கிறது.
எங்களது டிஜிட்டல் முன்னெடுப்புகள் வழியாக உலகில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் சமஸ்கிருத கல்வியை எளிதாக பெற வழிவகை செய்வதே நோக்கமாகும்.
சென்னை சமஸ்கிருத கல்லூரியில் வெறுமனே ஒரு மொழியை மட்டும் நாங்கள் கற்பிப்பதில்லை, காலங்களையும், யுகங்களையும், எல்லைகளையும் கடந்து வியாபிக்கிற ஞானத்திற்கான கதவுகளை நாங்கள் இங்கு திறந்து வைக்கிறோம் என கூறினார்.
மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியில் ஆழமான அறிவும், நிபுணத்துவமும் கொண்ட கல்வியாளர்களின் வழியாக உண்மையான கற்றல் முறையியல்களின் அடிப்படையில் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பின்கீழ் உருவான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகச்சிறந்த அறிஞர்கள் பலரை உருவாக்கியிருக்கும் பெருமையும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமஸ்கிருத கல்வியை வழங்கியிருக்கும் உயர்கல்வி நிறுவனம் என்ற சிறப்பான நற்பெயரையும் இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. சென்னை மாநகரின் பிரசித்திபெற்ற பள்ளிகளில் 10 மற்றும் 11ஆம் வகுப்பில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் இந்த சமஸ்கிருத மாநாட்டில் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் இணையதள முகவரிகளை அணுகலாம்.
டிஜிட்டல் கேம்பஸ்: www.madrassanskritcollege.com
மெயின் கேம்பஸ்: https://www.madrassanskritcollege.edu.in/
யூடியூப்: https://www.youtube.com/@MadrasSanskritCollege