டாடா சம்பன் வழங்கும் இதுவரையில்லாத புதுமையான தயாரிப்பான ’ஈஸி குக் ராகி ஆட்டா’ அறிமுகம்!
சென்னை: தினை அடிப்படையிலான மாவு சந்தையில், இதுவரையில்லாத ஒரு தயாரிப்பாக ஆரோக்கியமான சமையலில் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கும், எளிதில் சமைக்க உதவும் ஈஸி குக் ராகி ஆட்டாவை டாடா சம்பன் [Tata Sampann] அறிமுகப்படுத்துகிறது.
இதுவரையில்லாத ஒரு புதுமையான தயாரிப்பான இது தினையை நம்முடைய அன்றாட உணவில் மிக எளிமையாக சேர்ப்பதை மறுவரையறை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. டாடா சம்பன் வழங்கும் இந்த 100% தூய்மை ராகி மாவு தயாரிப்பு, ஊட்டமளிக்கும் உணவாகவும் இருக்கவேண்டும் மேலும் தங்களுடைய செளகரியத்திற்கேற்ற வகையில் எடுத்து கொள்ள உணவாகவும் இருக்கவேண்டுமென நாளுக்குநாள் மக்களிடையே அதிகரித்து வரும் எதிர்பார்புகளுக்கு, மிகச்சரியான தேர்வாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் மற்றும் இந்தியாவின் சமையல் பாரம்பரியத்திற்கு உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வரவேற்பு ஆகியவற்றினால், இப்போது தினை வகைகள் பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மேலும் தினைகளால் நமக்கு கிடைக்கும் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளால் அவற்றுக்கு ஏகோபித்த ஆதரவு நிலவி வருகிறது.
டாடா சம்பன் ஈஸ்ஸி குக் ராகி ஆட்டா [Tata Sampann Easy Cook Ragi Atta] மூலம், இனி தினையை வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட சமையலில் எந்தவித சிரமமும் இல்லாமல் ஒருங்கிணைக்க உதவுவதோடு, சத்துள்ள உணவாக எடுத்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. டாடா சம்பனின் இந்த தயாரிப்பு மைதா அல்லது கோதுமை சேர்க்கப்படாத 100% ராகி மாவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சுவைக்காக கூடுதலாக எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதோடு கெட்டுப்போகாமல் பாதுக்காக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் [additives / preservatives] எதுவும் சேர்க்கப்படவில்லை. டாடா சம்பன் ’ஈஸி குக் ராகி ஆட்டா’ இதுவரை தினை வகைகளை சமைப்பதில் இருந்து வந்த வரையறைகளை தகர்த்தெறிந்து இருப்பதோடு, பாரம்பரிய சமையலுக்கு ஏற்ற வகையில் தினைக் வகைகளை பிசையும் மற்றும் உருட்டி எடுக்கும் கடினமாக வேலைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. மிக எளிமையாக சமைக்க உதவுவதோடு, அவற்றின் புத்துணர்வு மிக்க தன்மையையும் அப்படியே அளிக்கிறது.
டாடா சம்பன் ஈஸி குக் ராகி ஆட்டா [Tata Sampann Easy Cook Ragi Atta], ராகியின் உள்ளார்ந்த ஊட்டச்சத்து நன்மையைத் தக்கவைத்துக்கொள்வதோடு, வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும், செளகரியத்திற்காகவும் நவீன தொழில்நுட்பத்தில் அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலமாகவே, தினை ஆட்டா மீது வாடிக்கையாளர்கள் காட்டி வரும் ஆர்வம் வெகுவாக அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள தினை ஆட்டா, கோதுமை ஆட்டாவிற்கு மிகச் சிறந்த மாற்றாகவும் அமைந்திருக்கிறது. ஆனால் ரோட்டி செய்வதற்காக அவற்றை ஒன்றாக பிசைந்து உருட்டி எடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். சூடான நீரைச் சேர்த்து, கைகளால் அவற்றை தட்டியெடுத்து பின்பு சப்பாத்திக்கட்டையால் உருட்டுவது என்பது அதிக மெனக்கெடலையும், நேரத்தையும் பிடிக்கும் ஒரு பெரிய வேலையாகி விடும். இதுவே பலருக்கு சவாலாக இருந்து வருகிறது.
இந்தியாவிலேயே இதுவரையில்லாத, ஒரு புதுமையான தயாரிப்பாக அறிமுகமாகி இருக்கும் டாடா சம்பன் ஈஸி குக் ராகி ஆட்டா, மேற்கூறியவற்றுக்கு மிக எளிய தீர்வாக இருப்பதோடு, ஊட்டச்சத்து எதுவும் குறையாமல் அப்படியே முழுச்சத்துடன் வழங்குகிறது. எளிதில் பிசையக்கூடிய அம்சங்களுடன், ரோட்டியில் கீறல் அல்லது விரிசல் இல்லாத ரோட்டியை உருவாக்க, நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்த, வழக்கமான முறையைப் போலவே தண்ணீரைச் சேர்த்தால் போதும். அடுத்த கணமே கோதுமை ரொட்டி செய்வது போலவே மிக எளிய முறையில் ராகி ரோட்டியை தயார் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா சம்பன் ஈஸி குக் ராகி ஆட்டா [Tata Sampann Easy Cook Ragi Atta] பயன்படுத்துவதற்கு மிகவும் வசதியான 500 கிராம் பேக்குகளில் கிடைக்கிறது. இதன் விலை 90/- ரூபாய் (அதிகப்பட்ச சில்லறை விலை அனைத்து வரிகளும் உட்பட). இத்தயாரிப்பானது முன்னணி இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் டாடா கன்ஸ்யூமரின் உரிமமுள்ள D2C தளமான Tata Nutrikorner-லும் கிடைக்கிறது.