FINANCE

தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு

சென்னையில் விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது. நேற்று தங்கத்தின் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்த நிலையில், இன்று அதன் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 6870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரண தங்கம் 640 ரூபாய் உயர்ந்து 54,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7495 ரூபாய்க்கும், சவரனுக்கு 59,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலையில் கிராமுக்கு 66 ரூபாய் உயர்ந்து 5,628 ரூபாய் எனவும், சவரன் 45,024 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 90 ரூபாய் 50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *